Principal Message
Tamil Girls Maha Vidyalaya

எமது கல்லூரி முதல்வரின் அகத்தினில் இருந்து அகம் நிறைந்த சில வரிகள்...............
“மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால்
மனையாளும் பெண்ணவளும் தெய்வமன்றோ
பெண்ணுக்கு விடுதலை தான் இல்லையென்றால்
பின் இந்த உலகினிலே துன்பமன்றோ”
மண்ணின் மாபெரும் சக்தி மகத்தான பெண்கள்...
எமது மலையகத்தின் மகளிர் சக்தியாக திகழும் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர்,ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகத்தின் பிரிதொரு தடம் பதித்திடும் சரித்திரமாக பாடசாலையின் இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்கும் எமது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்……….
இன்றைய உலகின் தொழிநுட்பத்தின் அதீத வளர்ச்சி பல்வேறு அநுகூலங்களை சம்பாதிப்பதோடு பிரதிகூலங்களையும் சவாலாக ஏற்கத்தான் செய்கின்றன…….
இந்த அடிப்படையில் எமது இணையத்தளம் இன்றைய மிகப்பெரும் தேவையாக இணையத்தள தேடல்கள் இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது.
எனவே எமது பாடசாலையின் மாணவர்களின் அறிவியல் தேடலுக்கு உறுதுணையாகவும் காலத்தின் கட்டாயங்களால் கலாச்சாரம் சீர்குலையாது எமது பாடசாலை கலாச்சாரத்தை என்றும் சிறப்புடன் பேணிக்காப்பதாக இவ் இணையத்தளம் பொறுப்பாசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரால் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
“குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொள்ளல்”
என்று வள்ளுவரின் வாக்கை வாகை சூடி தீமைகளை தவிர்த்து நன்மை மட்டுமே நலம் பயக்க வழிசமைத்து இவ் இணையத்தள முயற்சியினை இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
Mrs.R.Bavanie
Principal
Tamil Girls Maha Vidyalya