
உலகலாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் நிறுவனங்களாக பாடசாலைகள் செயற்படுகின்றன. பாடசாலைகள் தானாகவே தோன்றுவதில்லை அவை உருவாக்கப்பட்டவை அவற்றிற்கென ஒரு வரலாறு உண்டு. அதனை சரியான முறையில் திட்டவட்டமான ஆதாரங்களோடு முன்வைக்கப்படவேண்டிய தேவையை கருத்திற் கொண்டு இப்பாடசாலையின் வரலாறு முன்வைக்கப்படுகின்றது.
ஆசிரியர் குழாம்
பாடசாலையொன்றில் பிரதான ஆளணியினராக விளங்குகின்றனர். தற்போது எமது பாடசாலை ஆசிரியர் குழாத்தின் மொத்த ஆளணயினர்
கல்விசார் ஊழியர்கள்
மொத்த ஆசிரியர் 72,
அதிபர் திருமதி.ச.பவானி
பிரதி அதிபர் திருமதி.N.B.பிரபாகரன்
பிரதி அதிபர் திருமதி.G.மலர்மதி
பட்டதாரி ஆசிரியர்கள்
கலைப்பட்டதாரி ஆசிரியர்கள் 11
சங்கீத பட்டதாரி ஆசிரியர் 01
பரத நாட்டிய பட்டதாரி ஆசிரியர் 01
விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் 04
வணிகப் பட்டதாரி ஆசிரியர் 04
பாட ஆசிரியர்கள்
ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் 11
கணிதம் 05
விஞ்ஞானம் 06
தமிழ்மொழி 07
வரலாறு 03
இந்துசமயம் 04
இஸ்லாம் 01
கிறிஸ்தவம் 01
றோமன் கத்தோலிக்கம் 01
உடற்கல்வி 01
சிங்களம் 01
ஆங்கிலம் 06
தகவல் தொழிநுட்பம் 01
மனைபொருளியல் 02
புவியியல் 01
சித்திரம் 02
நாடகமும் அரங்கியலும் 01
சங்கீதம் 03
பரதம் 01
கல்வி சாரா ஊழியர்கள்
பாடசாலை சிற்றூழியர் 01
ஆய்வுக்கூட உதவியாளர் 03
நூலக உதவியாளர் 01
இரவு காவலாளி 01
இலங்கையின் கல்வி முறையானது ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்ப்பட்ட வரலாற்றை கொண்டது. காலனித்துவவாதிகளின் வருகைக்கு முன்னரே இந்து பௌத்த கல்வி முறைகள் வேறூன்றி இருந்துள்ளன. போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலங்களில் கல்வியானது காலனித்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஒரு கருவியாக பயன்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முழு நாடும் ஓராட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டதால் நாடு தழுவிய கல்வி விரிவாக்கம் ஏற்பட்டது.
ஆங்கில அரசின் அனுகரனை மூலம் ஆதரவுடனும் கிறிஸ்தவ மி~னரிகளும் கத்தோலிக்க மி~னரிகளும் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்தி வந்தன. இவர்களை பின்பற்றி சுதேசிகளான இந்துக்களும் பௌத்தர்களும் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்தி வந்தன. இதன் அடிப்படையில் ஊவா மாகாணத்திலும் கிறிஸ்தவ மி~னரிகளும் கத்தோலிக்க மி~னரிகளும் பல பாடசாலைகளை ஆரம்பித்தன.
கத்தோலிக்க திருசபையினூடாக ஊவா மாகாணத்தின் பதுளை மாநகரத்தின் மையத்தில் பல பாடசாலைகள் நிறுவப்பட்டன. அவற்றுள் ஒன்றாக ஆண் பெண் இருபாலாருக்கும் ஆரம்ப கல்வியை வழங்கிய ஒரு பாடசாலையாகவும் ஆங்கில மொழிமூல கல்வியை வழங்கிய ஒரு பாடசாலையாகவும் புனித உர்சலாஸ் கான்வென்ட் என்ற பாடசாலை அமைந்திருந்தது. சமூகத்தில் வசதிப்படைத்த பெற்றோர்களின் பிள்ளைகள் இங்கு கல்வசி கற்றனர்.1933ம் ஆண்டில் இது ஒரு மும்மொழி பாடசாலையாக விளங்கியது. மடத்துத் தலைவியான மோட் (Mother Maude) என்பவர் பாடசாலையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருந்தார். அவரைத் தொடர்ந்து அருட் சகோதரி ஆன் (Sister Anne) பாடசாலையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுதடாத்தி வந்த காலப் பகுதியில் இடைநிலை பாடசாலையாக இந்நிறுவனம் பரிணமித்தது.
இலங்கை கல்வி வரலாற்றில் 1939ம் ஆண்டில் 31ம் இலக்க கல்வி சட்டத்தைதொடர்ந்து கல்வி அணைவருக்கும் கட்டாயமாக்கபட்டது டொனமூர் சீர்திருத்தத்தை தொடர்ந்து 1943ம் ஆண்டு கல்வி மீதான விசேட ஆணைக்குழுவின் கல்வி அமைச்சர் ஊ.று.று. கன்னங்கரா தலைமையில் கல்வி அபிவிருத்திக்கான அத்திவாரம் அடப்பட்டு சகலருக்கும் கல்வி எனும் எண்ணக்கரு எழுச்சிப்பெற்று கல்வி நாடளாவிய ரீதியில் மிகவேகமான விரிவாக்கம் பெற்றது. சுதந்திரத்தின் பின் பாடசாலைகள் அரசினால் பொறுப்பேற்றப்பட்டு கல்வி வழங்கும் உரிமையை இலங்கை அரசு தனதாக்கிக் கொண்டது. இதனடிப்படையில் கத்தோலிக்க திருசபையின் முகாமைத்துவத்தின் கீழ் இருந்த புனித உர்கலாஸ் கான்வென்ட் என்ற பாடசாலையின் நிர்வாக பொறுப்பினை 1964ம் ஆண்டு அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. அரசாங்கம் மொழி அடிப்படையில் பாடசாலையை இரு புதிய நிர்வாகங்களில் கீழ் கொண்டு வந்தது. பழைய பாடசாலை இருந்த இடத்தில் “தமிழ் மகளிர் உயர்நிலை பள்ளி” என்ற பெயரில் பாடசாலை தொடரந்து இயங்கி வரலானது. 1964ம் ஆண்டு பாடசாலையின் புதிய நிர்வாக பொறுப்பினை ஏற்றுக் கொண்ட அதிபராக திருமதி.சு.ஞானமுத்து (1964-1980) வரை கடமையாற்றியுள்ளார். இவரை தொடர்ந்து 1981-1982 காலப்பகுதியில் திருமதி.லு.கோடீஸ்வரன் அதிபராக கடமையாற்றியுள்ளார்.
1983ம் ஆண்டு பாடசாலையின் அதிபராக திருமதி.று.கணேசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் காலத்தில் உயர்தரத்தில் கலை,வர்த்தன பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு 1ஊ பாடசாலையாக தரமுயர்ந்து இப்பாடசாலை தொடர்ந்து இயங்கியது. 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் ஏற்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களினால் பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. அதன் காரணமாக மாணவிகள் சகோதர பாடசாலையிலும் உயர்தர வகுப்பகளுக்கு கல்வி கற்க சென்றனர். பாடசாலையின் உட்கட்டுமான வசயினை விஸ்தரிக்கும் முகமாக அதிபரால் மேங்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் காரணமாக கட்டிட தொகுதிகள் கலைச்செல்வ விநாயகர ஆலயம் என்பன அமைக்கப்பட்டன. அதிபர் திருமதி.று.கணேசன் ஓய்வு பெற்ற 1999ற்குப் பின்னரான காலப்பகுதி பாடசாலை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஒரு சில முரண்பாடுகளும் முட்டுக்கட்டைகளும் சவால்களாக காணப்பட்ட சூழ்நிலையில் பாடசாலையை பொறுப்பேற்க வேண்டிய நிலை திருமதி.வு.செல்வரட்ணத்திற்கு ஏற்பட்டது. 1999காலப்பகுதியில் பாடசாலையில் ஏற்பட்ட முரண்பாடுகளைக் கருத்திற்கொண்டு பாடசாலையை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதற்காக கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் மூலம் அனைத்து ஆசிரியர்களும் இடமாற்றம் பெற்று புதிய ஆசிரியர் குழாமை பாடசாலை உள்வாங்கிக் கொண்டது இச்சந்தர்ப்பத்தில் பத்தில் பட்டதாரிகள் அல்லாத பயிற்றப்பட்ட ஆசிரியர்களும் வினைதிறனான முகாமைத்துவத்தினால் அதிபரின் அதிசிறந்த முன்னேற்றப் பாதையில் பயணித்த இப்பாடசாலை, சமூகத்தில் மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. இச்சந்தர்ப்பத்தில் கடமையாற்றிய ஆசிரியர்கள் தங்களை பட்டைத்தீட்டிக் கொண்ட தமது அர்ப்பணிப்பான சேவை மூலம் பாடசாலையின் புகழை நிலைநாட்டிக் கொண்டனர்.
தற்போது 90% மான பெருந்தோட்டத் துறையை சேர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளை உள்ளடக்கிய இப்பாடசாலை க.பொ.த உயர்தர வகுப்புகளில் விஞ்ஞான, கலை, வர்த்தகப் பிரிவுகளில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. அதனால் இப்பாடசாலை 1AB வகையை சேர்ந்ததாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் க.பொ.த சாதாரண தரங்களில் அதிகூடிய சித்திகளைப்பெற்று அதிகளவிலான மாணவிகள் தங்கள் உயர்தர கல்வியை ஏனைய பாடசாலைகளில் கற்று வைத்தியர்களாகவும், பொறியியளாளர்களாகவும் சட்டதரணிகளாகவும் பல்கலைகழக விரிவுரையாளர்களாகவும் கல்வி பணிப்பாளர்களாகவும் ஆய்வாரள்களாகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர் அந்தஸ்துப் பெற்றுள்ளனர் என்றால் மிகையாகாது.தொடர்ந்து இதுவரை பிரதி அதிபராகக் கடமையாற்றிய திருமதி.R.பவானி அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக 03.03.2014இல் பொறுப்பேற்று இன்றுவரை சிறப்பாகக் கடமையாற்றுகின்றார். இப்பாடசாலையானது இவரது வழிக்காட்டலில் பல்வேறு வெற்றிகளை ஈட்டி பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நிற்கின்றது. பரீட்சைப்பெறுபேறுகள்,இணைப்பாடவிதான செயற்பாடுகள்,பௌதீகவள அபிவிருத்திகள் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக தொழிநுட்ப சாதனங்களின் பஙிகளிப்பும் சிறப்புமிக்க வளர்ச்சியோடு வெற்றிநடை பயில்கின்றது என்பது மறுக்க முடியாததாகும்.