Deputy Principal Message
Tamil Girls Maha Vidyalaya

பிரதி அதிபரின் உள்ளத்திலிருந்து……………..
வளர்ந்து வரும் சமுதாயத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் மாணவ மணிகளின் அறிவுக் கண்களை திறப்பதில் இக் கல்லூரியானது 89வது வருடத்தில் தடம் பதித்து நிற்கின்றது. எந்தவொரு கல்விச் சாலையினதும் முக்கிய இலக்காக கொள்ளத்தக்கது அதன் கல்வி அடைவுகள் என்பதை எவ்விதத்திலும் மறுக்கமுடியாது. எமது பாடசாலையும் இச்சவால்மிக்க இலக்கினை கடந்த காலங்களில் மிக உறுதியுடன் எதிர்க்கொண்டிருப்பது பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய விடயமாகும். பத்து தசாப்தங்களை அண்மித்து இன்று நவீன யுகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இக்கலாசாலை இன்று கலைத்துறையிலும்,விஞ்ஞானத்துறையிலும்,வர்த்தகத்துறையிலும் தமது வாரிசுகளை உருவாக்கி வருகின்றது.
‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம், என்ற
விந்தை மனிதர் தலைகுனிய………….
‘பட்டல்கள் ஆளவும் சட்டல்கள் ஆக
பாரினில் பெண்கள்…………..’
என பாரதி கூறிய கூற்றினை மெய்யாக்கி எமது சமூக பெண்கள் சாதனை படைக்க சளைத்தவர்கள் அல்ல என்பதனை இப்பாடசாலை சாதித்துக் காட்டியுள்ளது. என்பதும் மறுக்கமுடியாததாகும். தேசிய ரீதியில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் எமது மாணவிகள் தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர் என்பதை பாடசாலை வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகிர்கின்றன.
இவ்வகையில் தற்பொழுது எமது பாடசாலைக்கான தனிப்பட்ட இணையத்தளம் (website)ஒன்று புதிதாக உருவாக்கப்படுகின்றமை முக்கிய நிகழ்வாகும். இக் கன்னி முயற்சி தொடர்ந்து வெற்றிநடை போட வேண்டும் என மன நிறைவோடு வாழ்த்துகிறேன்.
மேலும் இதில் பாடசாலை பற்றிய அனைத்து விடயங்களும் வெளியிடப்படுவதால் அனைவரும் பாடசாலை பற்றிய அனைத்து
விடயங்களையும் அறிந்து கொள்ளலாம்.இந் நடவடிக்கையின் மூலம் ஏனைய பாடசாலைகளுக்கும் பயன் பெற வாய்ப்பிருக்கலாம். இம் முயற்சியை மேற்கொண்டிருக்கும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரியரான M.சர்மிளாவிற்கும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.Deputy Principal
Tamil Girls Maha Vidyalaya,Badulla