பாடசாலை கீதம்
பதுளை மகளிர் மகா வித்தியாலயம் தனை வாழ்த்துவோம்
அதி உயர்வுறு மலை நிரைகளும் அருஞ்சுவைத்தரு கனி மரங்களும்
குதி தருபுனல் நிறை வயல்களும் குலவிடுமொரு தலமிசைத்திட
பதுளை மகளிர் மகா வித்தியாலயம் தனை வாழ்த்துவோம்
கசிவுரு மதிழ் உணர்வெழுந்திட கதிதரு கலை வளமுயர்ந்திட
இசைவுறப் பயில் சிறுமியர் எம்மை இகபரசுகம்பெற வளர்த்திட
பதுளை மகளிர் மகா வித்தியாலயம் தனை வாழ்த்துவோம்
தமிழ் மொழியொடு பிறமொழிகளும் சமரசமிகு சமய நெறியும்
அமிழ்தெனவளர் பல கலைகளும் அருவிஞ்ஞான் பெருமையும் தரும்
பதுளை மகளிர் மகா வித்தியாலயம் தனை வாழ்த்துவோம்
வாழ்த்துவோம்................. வாழ்த்துவோம்.................... வாழ்த்துவோம்.................