• பாடசாலையினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஊதா,வெள்ளை நிறம் கலந்த கழுத்துக்கட்டி அணிதல் வேண்டும்.
• சீருடை (six box belt) 06 மடிப்புகள் கொண்டவையாக இருக்க வேண்டும்.
• காலணி கருப்பு நிறத்திலும் தரம்1-5 வரை ஒட்டுகின்ற காலணியாகவும்,தரம் 6-13 வகுப்பு (shoe lace) கொண்டு கட்டுபவையாகவும்,காலுறைகள் வெள்ளை நிறத்திலும் மடிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
• பாடசாலை இலட்சினை துணியிலானது. இதனை சீருடையின் இடப்பக்கத்தில் தைத்தல் வேண்டும்.
• தலைமயிர் தரம் 1-5 வரை கட்டையாக வெட்டிவிடல் வேண்டும். தரம் 06 இற்கு மேல் தலைமயிர் வளர்க்கலாம். வளர்த்தால் நேர் வகிடு எடுத்து,இரட்டைப்பின்னல் பின்னி,காதோரத்தில் கருப்பு நிற ரிப்பன் கொண்டு மடித்து கட்டல் வேண்டும்.
• இப்பாடசாலையில் ஒவ்வொரு பாடத்திற்கும் வர்ணம் செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப பாடப்புத்தகங்களுக்கும்,பயிற்சிப்புத்தகங்களுக்கும் வெள்ளை நிற உறையிட்டு,பாடத்திற்குரிய வர்ணக் கடதாசியை (Ribbon) போல ஒட்டுதல் வேண்டும்.
• அதிபர்,ஆசிரியர்கள் அனைவரும் பிரதி திங்கட்கிழமை தோரும் ஊதா நிறத்தைக் கொண்ட சேலை அணிய வேண்டும்.
• காலை 07.30 மணிக்கு முன் பாடசாலைக்கு வருகை தருதல் வேண்டும்.
• காலை 07.30 மணிக்கு பாடசாலை பிரதான வாயில் மூடப்பட்டு காலைப் பிரார்த்தனை முடிவடைய திறக்கப்படும்.
• காலை 07.30 மணிக்கு பிந்தி வருபவர்கள் பிரார்த்தனை முடியும் வரை வெளியில் நிற்க வேண்டும்.
• காலை 07.20மணிக்கு காலைப்பிரார்த்தனை ஆரம்பமாகி (silent bell)அடிக்கப்படும். இதன்போது பாடசாலை வளவிற்குள் நடமாடும் அனைவரும் அமைதியாகி நின்ற இடத்தில் அப்படியே நிற்றல் வேண்டும். அதன் பின்னர் அடிக்கப்படும் மணிக்கு மாணவர்கள் அனைவரும் வலைப்பந்தாட்ட மைதானத்தில் கோயில் மண்டபத்தை நோக்கிய வண்ணம் வரிசைக்கிரமமாக நிற்றல் வேண்டும்.
• ஆசிரியர்களும் மண்டபத்தில் வரிசையாக நிற்றல் வேண்டும்.
• காலைக்கூட்டமானது பிரதிதிங்கட்கிழமை தோறும் நற்சிந்தனை,பாராட்டு வழங்கல் முதலிய விடயங்களை கொண்டதாக அமையும்.
• செவ்வாய்-வியாழன் மூன்று நாட்களுக்கு மும்மதங்களுக்கான பிரார்த்தனையுடன் தேசியகீதம்,பாடசாலைகீதம் முடிவுற்ற பின் உடற்பயிற்சி நடைபெறும்.
• வெள்ளிக்கிழமைகளில் மும்மதங்களுக்கான பிரார்த்தனையும், தனித்தனியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கூட்டுப்பிரார்த்தனையாக இடம்பெறும்.
• பாடசாலைக்கென விநாயகர் கோயில் அமைக்கப்பட்டு உள்ளமையினால் தினந்தோறும் பூசை நடைபெற வேண்டும் அதற்காக தரம் 6-13 வரையிலான வகுப்புகளுக்கு பூசைக்கான கால ஒதுக்கீடு கொடுக்கபட்டு காலை கூட்டம் நடைபெறும் வேளையில் குறிப்பிட்ட வகுப்பு மாபணவர்கள் மாத்திரம் கோயில் பூசையில் கலந்துகொள்வார்.
• திங்கட்கிழமை தோறும் தேசிய கீதம்,பாடசாலைகீதம் பாடி முடிய மாணவர்கள் நற்சிந்தனை வழங்க வேண்டும். பாடசாலைக்கு வரவு ஒழுங்கில் ஆசிரியர்களும் நற்சிந்தனை வழங்குவார்கள். நற்சிந்தனைக்காக கருப்பொருள் திட்டமிடபட்டு இருக்கும்.
• பாடசாலைக்கு வந்த பின்னர் சுகயீனம் காரணமாக வீடு செல்ல வேண்டிய மாணவர்கள் வகுப்பாசிரியருக்கு அறிவித்து அதிபரின் அனுமதியுடன் அதற்குரிய ஆவணத்தில் வெளியேறும் காரணம் குறிப்பிட்டு கையொப்பம் இட்ட பின்னர் செல்ல வேண்டும்.
• பாடசாலை தமிழ்மொழி வாழ்த்து பாடலுடன் முடிவடையும் இதன் பின்னர் மாணவர்கள் இருவர் இருவராக வரிசையாக வெளியேறுதல் வேண்டும். மாணவர்கள் அனைவரும் வெளியேறிய பின்னரே ஆசிரியர்கள் கையொப்பம் இடல் வேண்டும்.
• தனது வகுப்பில் உள்ள மாணவர்களின் சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பாகவும் அவர்களது ஒழுக்கங்கள் தொடர்பாகவும் அறிவுறுத்தல்கள் வழங்குவதுடன் சுமுகமான முறையில் அவர்களுக்கு கற்றல் தொடர்பாக ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கும், முகாமைதுவத்துடன் இணைந்து வழிகாட்டல் ஆசிரியர்களின் கடப்பாடாகும்.
• அனைத்து ஆசிரியர்களும் பாடசாலையினுள்ளும் பாடசாலையின் வெளியிலும் மாணவர்களின் ஒழுக்க பண்புகளுக்கு பொறுப்பு கூறுபவராக இருத்தல் வேண்டும்.